Home ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக நடிகர் சூர்யாவும், கார்த்தியும்

ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக நடிகர் சூர்யாவும், கார்த்தியும்

by Jey

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் என மொத்தம் 648 நகரப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், திரை உலகின் முன்னனி நட்சத்திரங்களாக வலம் வரும் நடிகர் சூர்யாவும், அவரது சகோதரரான நடிகர் கார்த்தியும் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். அவர்கள் இருவரும் சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்குச்சாவடிக்கு பிற்பகல் வேளையில் வந்து வாக்களித்து சென்றனர்.