Home ஸ்டிக்கர்களால் வீணாகும் உணவு – கனேடிய நிபுணர்கள்

ஸ்டிக்கர்களால் வீணாகும் உணவு – கனேடிய நிபுணர்கள்

by Jey

ஒரு பக்கம் உலக நாடுகள் பலவற்றில் மக்கள் உணவுப்பொருட்கள் விலைவாசி உயர்வால் அவதியுற்று வருகிறார்கள். மறுபக்கமோ உணவுப்பொருட்களின் கவர்களில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்கள் தவறாக வழிநடத்துவதால், அல்லது தவறாக புரிந்துகொள்ளப்படுவதால் உணவுப்பொருட்கள் வீணாக்கப்பட்டுவருகின்றன,

ஆக, நல்ல உணவுப்பொருட்கள் காலாவதியாகிவிட்டதாக தவறாக கருதப்பட்டு குப்பையில் வீசப்படுகின்றன. சிலர், நல்ல உணவை குப்பையில் வீச, வேறு சிலரோ, பசியால் வாடுகிறார்கள்.

அதாவது, best-before date என்பது, எந்த காலகட்டத்தில் உணவுப்பொருள் மிகவும் பிரஷ்ஷாக (peak freshness) இருக்கும் என்பதைக் காட்டும் ஒரு விடயம்தான். ஆக, அந்த திகதி முடிந்துவிட்டால் அந்த உணவை சாப்பிடக்கூடாது என்று பொருள் அல்ல.

ஆனால், மக்கள் ஒரு உணவுப்பொருளின் பாக்கெட்டில் உள்ள best-before திகதியைப் பார்த்து, அதை வீண் என எண்ணி குப்பையில் வீசி விடுகிறார்கள்.

இன்னொரு வேடிக்கையான விடயம் என்னவென்றால், அந்த உணவுப்பொருள், உதாரணமாக, மிளகு என்று வைத்துக்கொள்வோமே!, அதை ஒருவர் உற்பத்தி செய்பவரிடமிருந்து ஒரு நாள் வாங்கி, ஒரு குறிப்பிட்ட நாளில் பாக்கெட்டில் அடைக்கிறார். அன்று, அந்த பாக்கெட்டின் மீது best-before date என்றொரு திகதி குறிப்பிட்ட ஸ்டிக்கரை ஒட்டுகிறார்.

அதே மிளகை வேறொருவர், சில நாட்களுக்குப் பிறகு வாங்கி பாக்கெட்டில் அடைத்து best-before date ஒட்டி விற்பனைக்கு அனுப்புகிறார். ஆக, அது வியாபாரிகள் குறிப்பிடும் திகதிதானே ஒழிய, விஞ்ஞானிகள் குறிப்பிடும் திகதி அல்ல.