Home இந்தியா கள்ளச் சந்தையில் ஆக்ஸிஜன் விற்பனை: தில்லியில் இருவர் கைது

கள்ளச் சந்தையில் ஆக்ஸிஜன் விற்பனை: தில்லியில் இருவர் கைது

by admin

கரோனா சிகிச்சைக்குத் தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்த இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து நான்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களும், ஒரு வணிக ரீதியான ஆக்ஸிஜன் சிலிண்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.

நாட்டின் தலைநகரான தில்லியில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையும், படுக்கைகளுக்குத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

இந்த இக்கட்டான சூழலை சமாளிக்க மத்திய அரசுடன் இணைந்து பல்வேறு முயற்சிகளை தில்லி அரசு எடுத்து வருகிறது.

மேலும், கள்ளச் சந்தையில் கரோனா சிகிச்சைக்குத் தேவையான ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் போன்றவற்றை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லி உயர்நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

அதனைத் தொடர்ந்து கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு ஆக்ஸிஜன் விற்பனை செய்த இருவரை இன்று (ஏப்.28) தில்லி காவல்துறை கைது செய்துள்ளது. அவர்களிடமிருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களையும் பறிமுதல் செய்துள்ளது.

related posts