Home கனடா அமெரிக்காவிலிருந்து நடந்தே எல்லையை தாண்டும் கனேடியர்கள்!

அமெரிக்காவிலிருந்து நடந்தே எல்லையை தாண்டும் கனேடியர்கள்!

by admin

விமான போக்குவரத்து சேவையை பயன்படுத்தினால் ஹோட்டலில் சுயதனிமைப்படுத்தலுக்கு ஆளாக வேண்டும் என்பதற்காக நடந்தே அமெரிக்காவிலிருந்து கனடியர்கள் எல்லையை தாண்டுவது தெரியவந்துள்ளது.

கனடாவில் கொரோனா பரவலை தடுப்பதற்காக விமானத்தில் வந்திருக்கும் பயணிகள், அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள ஹொட்டல்களில் கொரோனா பரிசோதனை முடிவுகள் வரும் வரை மூன்று நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், இதற்கான செலவுகளை அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதனை தவிர்ப்பதற்காக அமெரிக்காவிலிருந்து வரும் கனடியர்கள், டாக்ஸி மூலமாகவோ, நடந்தே எல்லையை கடப்பது தெரியவந்துள்ளது.

டாக்ஸி மூலம் எல்லையை கடக்க வெறும் $250 அல்லது அதற்கும் குறைவாக செலவாகும், ஆனால் விமான சேவையை பயன்படுத்தி வந்தால், ஹொட்டல் தனிமைப்படுத்தலுக்கே $1000 வரை செலவாகும் என தெரிகிறது.

தினமும் காலை 6 மணியிலிருந்து இரவு 12 மணிவரை மக்களிடமிருந்து தங்களுக்கு அழைப்புகள் வந்து கொண்டிருப்பதாக குறிப்பிடுகிறார் 716 Limousine-ன் ஜெனரல் மேனேஜரான John Arnet.

அமெரிக்காவிலிருந்து டாக்ஸி மூலம் எல்லைக்கு வரும் மக்கள், நடந்தே எல்லையை கடந்து, கனடாவுக்குள் நுழைந்தவுடன் மற்றொரு டாக்ஸி மூலம் தங்களது வீடுகளுக்கு செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

related posts