இலங்கையில் தற்போது வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றானது இங்கிலாந்தில் அடையாளம் காணப்பட்டுள்ள B.1.1.7 என்ற உருமாறிய கொவிட் வகையைச் சேர்ந்ததென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் மருத்துவர் சந்திமா ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
குறித்த புதிய வகை கொரோனா வைரஸ் கொழும்பு, பொரலஸ்கமுவ மற்றும் பியகம ஆகிய பகுதிகளில் பெறப்பட்ட மாதிரிகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.
உருமாறிய கொரோனா வைரஸ் (B.1.1.7 பரம்பரை) அதிக பரவும் தன்மை கொண்டது.