Home கனடா கனடாவில் வாழிட உரிமம் வாங்கித்தருவதாக கூறி 31.74 லட்ச ரூபாய் மோசடி: மூவர் கைது

கனடாவில் வாழிட உரிமம் வாங்கித்தருவதாக கூறி 31.74 லட்ச ரூபாய் மோசடி: மூவர் கைது

by admin

கனடாவில் நிரந்தர வாழிட உரிமம் வாங்கித்தருவதாக கூறி 31.74 லட்ச ரூபாய் மோசடி செய்த வழக்கில், இந்தியர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

அம்பாலா என்ற இடத்தைச் சேர்ந்த கௌரவ் என்பவர், அம்பாலாவில் ட்ராவல் ஏஜன்சி நடத்தி வரும் ரிஷப் கார்க், அவரது மனைவி ஷிவானி கார்க் மற்றும் அவர்களது உறவினரான சஞ்சீவ் கோயல் என்பவர்களை சந்தித்துள்ளார்.

அவர்கள், கௌரவை கனடாவுக்கு அனுப்பிவைப்பதாகவும், அங்கு ஒரு நல்ல வேலை ஏற்பாடு செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளார்கள்.

இந்த நடைமுறைகள் முடிவடைய இரண்டு ஆண்டுகள் ஆகும் என்றும், அதற்கான செலவு 40 லட்சம் ரூபாய் ஆகும் என்றும் கூறியுள்ளனர்.

இதற்கிடையில், கௌரவ் எட்டு இடங்களுக்கு பயிற்சிக்காக செல்லவேண்டும் என்றும், ஒவ்வொரு பயிற்சிக்கும் 5 லட்ச ரூபாய் ஆகும் என்றும் கூறியிருக்கிறார்கள்.

அதன்படி முதலில் 5,50,000 ரூபாய் செலுத்திய கௌரவை மலேசியாவுக்கு அனுப்பியுள்ளார்கள். அங்கே உள்ள ஏஜண்ட் ஒருவர், கௌரவை பல இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார், ஆனால் பயிற்சி ஏதும் கொடுக்கவில்லையாம்.

இதேபோல், துபாய், தாய்லாந்து, தான்சானியா என பல இடங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார் கௌரவ். ஆனால், மொத்தத்தில் 31.74 லட்ச ரூபாய் வரை செலுத்தியும் கௌரவை கனடாவுக்கு அனுப்பவோ,, அவருக்கு நிரந்தர வாழிட உரிமமோ அல்லது வாக்களித்தது போல் வேலையோ பெற்றுத்தரவில்லை.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த கௌரவ், கடைசியாக பொலிசாரிடம் சென்றுள்ளார். கௌரவ் அளித்த புகாரின் பேரில், கனடாவில் நிரந்தர வாழிட உரிமம் வாங்கித்தருவதாக கூறி, 31.74 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக, ரிஷப் கார்க், அவரது மனைவி ஷிவானி கார்க் மற்றும் சஞ்சீவ் கோயல் மீது பொலிசார் வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.

 

related posts