தங்கள் நாட்டின் யான்பு நகர துறைமுகத்தின் மீது வெடிபொருள் நிரப்பிய ஆளில்லா படகு மூலம் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அந்தப் படகை இடைமறித்து அழித்துவிட்டதாக சவூதி அரேபியா தெரிவித்தாலும், துறைமுகம் வழியான கடல்வழிப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கலாம் தனியாா் பாதுகாப்பு நிறுவனங்கள் கூறியுள்ளன.
யேமனில் ஈரான் ஆதரவு பெற்ற கிளா்ச்சிப் படையினருக்கு எதிராக சவூதி அரேபியா சண்டையிட்டு வரும் சூழலில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே, வெடிபொருள் நிரப்பிய ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தி ஹூதி கிளா்ச்சியாளா்கள் சவூதி அரேபியா மீது தாக்குதல்கள் நடத்தியது நினைவுகூரத்தக்கது