கொவிட்-19 தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக நேற்றைய தினம் 145 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் களுத்துறை, மொனராகலை மற்றும் திருகோணமலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பிரதிப் பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன கூறியுள்ளார்.
குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 31 முதல் இதுவரையான காலப் பகுதியில் சுமார் 3,900 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.