மியான்மரில் தாய்லாந்துடனான எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ராணுவ நிலையை காரென் பழங்குடியினா் படை கைப்பற்றியுள்ளது. அந்த நாட்டில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்து, இந்நடவடிக்கையை அந்த கொரில்லா படை மேற்கொண்டுள்ளது.
இதையடுத்து, காரென் படையினா் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கிராமத்தின் மீது மியான்மா் ராணுவம் பல மணி நேரத்துக்கு வான்வழித் தாக்குதல் நடத்தியதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனா்.
மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ாகக் கூறி, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த பிப். 1-ஆம் தேதி கலைத்தது; அரசியல் தலைவா்கள் கைது செய்யப்பட்டனா்.