தெலங்கானாவில் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,061 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 4,19,966 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், தொற்று பாதித்து 56 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை மொத்தம் 2,150 பேர் பலியாகினர்.
நேற்று ஒரேநாளில் அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் மொத்தம் 99,638 பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர்.
தற்போது மருத்துவமனை சிகிச்சையில் 72,133 பேர் உள்ளனர். 5,093 பேர் நோயிலிருந்து மீண்டுள்ள நிலையில் மொத்தம் இதுவரை 3,45,683 பேர் குணமடைந்துள்ளனர்.
மாநிலத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.