Home இந்தியா 1.50 கோடி கரோனா தடுப்பூசிகள் கொள்முதல் செய்கிறது தமிழக அரசு

1.50 கோடி கரோனா தடுப்பூசிகள் கொள்முதல் செய்கிறது தமிழக அரசு

by admin

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலமாக முதற்கட்டமாக 1.50 கோடி கரோனா தடுப்பூசியை தமிழக அரசு கொள்முதல் செய்கிறது.

மே 1-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் திட்டம் நடைமுறைக்கு வரவிருக்கும் நிலையில், அதற்குத் தேவையான கரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்யும் பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பொன்றில், இந்தியாவிலேயே அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்த முதல் மாநிலம் தமிழ்நாடு.

கரோனா நோய்த் தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தமிழ்நாடு அரசால் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு செலுத்தப்பட்டு வரும் இலவச தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை (27.04.2021), 55.51 இலட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், வரும் மே 1-ந் தேதி முதல் 18 வயதிற்கு மேல் 44 வயதுவரை உள்ளவர்களுக்கு ஏற்கனவே அறிவித்தவாறு, இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில் தேவையான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கென, முதற்கட்டமாக 1.50 கோடி தடுப்பூசிகள் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (டிஎன்எம்எஸ்சி) மூலமாக கொள்முதல் செய்து வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

related posts