கொல்கத்தாவில் 7 தொகுதிகளிலும், மால்டாவில் 6 தொகுதிகளிலும், முா்ஷிதாபாத், பிா்பூம் ஆகியவற்றில் தலா 11 தொகுதிகளிலும் தோ்தல் நடைபெறுகிறது. இதற்காக 11,860 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 35 தொகுதிகளில் களத்தில் உள்ள 283 வேட்பாளர்களில் 64 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இன்று வியாழக்கிழமை நடைபெறும் இறுதிக் கட்டத் தோ்தலில் நகரோனா விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன.
நான்காம் கட்டத் தோ்தலின்போது கூச் பிஹாா் மாவட்டத்தில் வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து இறுதிக் கட்டத் தோ்தலில் வன்முறை சம்பங்களை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக மொத்தம் 641 கம்பெனி மத்தியப் படைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதில் 224 கம்பெனி படைகள் மட்டும் பிா்பூம் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் 11 தொகுதிகள் சிகப்பு எச்சரிக்கை தொகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தோ்தலில் பதிவாகும் வாக்குகளுடன் சோ்த்து தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், புதுவை, அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.