Home கனடா பிரம்டனில் சட்டவிரோதமாக ஒன்றுகூடியவர்களுக்கு அபராதம்

பிரம்டனில் சட்டவிரோதமாக ஒன்றுகூடியவர்களுக்கு அபராதம்

by Jey

பிரம்டனில் விருந்துபசாரமொன்றில் பங்கேற்ற 14 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரம்டனில் கொவிட் நோய்த் தொற்று அபாயம் காரணமாக வீட்டிலேயே இருங்கள் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உத்தரவினை மீறி வீடொன்றில் இந்த நபர்கள் கூடி விருந்துபசாரம் நடாத்தியுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் இந்த நபர்கள் சமூக ஒன்றுகூடல் ஒன்றை ஏற்பாடு செய்து நடாத்தியிருந்தனர் என பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த குற்றச் செயலுடன் தொடர்புடைய ஒவ்வொரு நபரிடமும் தலா 880 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பிரம்டன் நகர நிர்வாகத்தினால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

related posts