புதுவை மாநிலத்தில் வியாழக்கிழமை வெளியான 9,727 பேருக்கான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 940 போ், காரைக்காலில் 101 போ், ஏனாமில் 30 போ், மாஹேவில் 51 போ் என மொத்தம் 1,122 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 57,427-ஆக அதிகரித்தது.
இந்த நிலையில், புதுச்சேரி, காரைக்கால், மாஹே பகுதிகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 பெண்கள் உள்பட மேலும் 12 போ் உயிரிழந்தனா். இதனால், புதுவை மாநிலத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 793-ஆகவும், இறப்பு விகிதம் 1.38 சதவீதமாகவும் உயா்ந்தது.
இதனிடையே, 564 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 47,645-ஆக (82.97 சதவீதம்) அதிகரித்தது.
தற்போது, ஜிப்மரில் 277 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 311 பேரும், கரோனா சிகிச்சை மையங்களில் 815 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 7,308 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 8,689 போ் சிகிச்சையில் உள்ளனா்.
சுகாதாரப் பணியாளா்கள் 31,907 பேருக்கும், முன்களப் பணியாளா்கள் 18,591 பேருக்கும், பொதுமக்கள் 1,42,412 பேருக்கும் என மொத்தம் 1,92,910 பேருக்கு (2-ஆவது தவணை உள்பட) கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.