Home உலகம் விண்வெளி வீரர் காலமானார்!

விண்வெளி வீரர் காலமானார்!

by admin

மைக்கேல் கொலின்ஸ் சுமார் 238,000 மைல்கள் பயணித்து நிலவை நெருங்கி, நிலவில் இருந்து 69 மைல்கள் தொலைவுக்கு வந்தபோதும் நிலவில் கால் வைக்கவில்லை.

நிலவுக்கு மனிதர்களை அனுப்பி வெற்றிகரமாக தரையிறக்கிய முதல் விண்வெளிப் பயணத்திட்டம் அப்பல்லோ-11 ஆகும்.

நிலவில் முதன் முதலில் காலடி வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங்குடன், நிலவுப் பயணம் மேற்கொண்டவர் மைக்கேல் கொலின்ஸ். நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்ட்ரின் ஆகியோர் நிலவில் இறங்கி நடந்தபோது, அப்பல்லோவின் கட்டுப்பாட்டு விண்கலத்தில் மைக்கேல் கொலின்ஸ் தங்கியிருந்து சுற்றுவட்டப்பாதை பணிகளை கவனித்தார்.

இந்த பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு அப்பல்லோ-11 பூமிக்கு திரும்பியதை உலகமே கொண்டாடியது.

இந்த சிறப்புமிக்க விண்வெளிப் பயணத்தில் இடம்பெற்றிருந்த விண்வெளி வீரரான மைக்கேல் கொலின்ஸ், முதுமை சார்ந்த சார்ந்த உடல்நல கோளாறு மற்றும் புற்றுநோய் பாதிப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 90.

புற்றுநோயுடன் போராடி வந்த மைக்கேல் கொலின்ஸ் மறைந்துவிட்டதாகவும், தனது இறுதி நாட்களை அமைதியாக குடும்பத்தினருடன் கழித்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மைக்கேல் எப்போதும் வாழ்க்கையின் சவால்களை மனதாரவும் பணிவுடனும் எதிர்கொண்டார் என்றும், அதே வழியில் இறுதி சவாலை எதிர்கொண்டார் என்றும் கூறுகின்றனர்.

மைக்கேல் கொலின்ஸ், சுமார் 238,000 மைல்கள் பயணித்து நிலவை நெருங்கினார். நிலவில் இருந்து 69 மைல்கள் தொலைவுக்கு வந்தபோதும், நிலவில் கால் வைக்கவில்லை. ஆல்ட்ரின் மற்றும் ஆம்ஸ்ட்ராங் இருவரும் நிலவின் மேற்பரப்பில் இருந்தபோது அவர் கிட்டத்தட்ட ஒரு நாள் சுற்றுப்பாதையில் கழித்தார்.

இந்த தருணத்தில் தான் தனிமையில் இருக்கவில்லை என்றும், ஒரு கட்டுப்பாட்டு அமைப்பின் சிறப்பு பைலட்டாக இருந்ததால், விண்வெளி பயணத்தின் ஒரு முக்கிய அங்கமாக உணர்ந்ததாகவும் மைக்கேல் கொலின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

related posts