கனேடிய எல்லைப் பகுதிகளில் கட்டாய தனிமைப்படுத்தலை அறிமுகம் செய்யுமாறு ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசாங்கத்தி மாகாண முதல்வர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது விமான நிலையங்களில் காணப்படும் தனிமைப்படுத்தல் சட்டங்கள் தரைவழி எல்லைப் பகுதிகளிலும் அமுல்படுத்தப்பட வேண்டுமென போர்ட், கடிதம் மூலமாக கோரியுள்ளார்.
குறைந்தபட்சம் மூன்று நாட்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கை அறிமுகம் செய்யப்பட வேண்டுமென போர்ட் வலியுறுத்தியுள்ளார்.
தரை வழியாக கனடாவின் எல்லைக்குள் பிரவேசிக்கும் அனைவரையும் மூன்று நாட்கள் ஹோட்டல்களில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டுமென அவர் தனது கடிதத்தில் மேலும் கோரியுள்ளார்.