பிரிட்டிஸ் கொலம்பியாவின் அனைத்துப் பிரஜைகளுக்கும் தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளது.
பைசர் மற்றம் பயோடெக் தடுப்பூசிகள் பாரியளவில் கிடைக்கப் பெறுவதனால் அனைத்துப் பிரஜைகளும் தடுப்பூசி ஏற்ற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜுன் மாத நடுப்பகுதியில் மாகாணத்தின் அனைத்து வயது வந்தவர்களுக்கும் கொவிட் தடுப்பூசி வழங்கப்படும் என மாகாண சுகாதார அதிகாரி டொக்டர் பொனி ஹென்ரி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரங்களில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.