எதிர்வரும் மே மாத இறுதிக்குள் ஒன்றாரியோவின் அனைத்து வயது வந்தவர்களும் கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்வதற்காக தங்களை முன்பதிவு செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண தடுப்பூசி முன்பதிவு செய்யும் இணையத் தளத்தின் ஊடாக மே மாதம் 24ம் திகதிக்குள் அனைவரும் தங்களை முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
கொவிட் தடுப்பூசிகள் பெருமளவில் கிடைக்கப் பெற உள்ளதாகவும் முன்னரங்கப் பணியாளர்கள் மற்றும் ஆபத்து வலயங்களுக்கு முன்னுரிமை அளித்து இவை விநியோகம் செய்யப்படும் எனவும் மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மே மாதம் ஒவ்வொரு வாரத்திலும் பைசர் தடுப்பூசிகள் 800000 மருந்தளவுகள் கிடைக்கப் பெற உள்ளதாகவும் இந்த எண்ணிக்கை ஜுன் மாதம் ஒரு வாரத்திற்குபு 940,000 என்ற அடிப்படையில் உயர்வடையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.