Home கனடா றொரன்டோ பெரும்பாக பகுதியில் பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியம்

றொரன்டோ பெரும்பாக பகுதியில் பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியம்

by Jey

றொரன்டோ பெரும்பாக பகுதியில் பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனேடிய சுற்றாடல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் றொரன்டோ பெரும்பாக பகுதியில் வடமேற்காக இவ்வாறு பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் இந்த காற்று வீசக் கூடும் எனவும் மாலை வேளையில் அது சற்றே தீவிரமடையக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் தடைப்படக்கூடிய சாத்தியம் உண்டு எனவும் மரக் கிளைகள் முறிந்து வீழக் கூடிய வாய்ப்புக்களும் உண்டு எனவும் கனேடிய வானிலை அவதான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

related posts