Home கனடா கல்கரியில் கொவிட் தொற்று பரவுகை வீதம் இந்தியாவை விடவும் அதிகம்

கல்கரியில் கொவிட் தொற்று பரவுகை வீதம் இந்தியாவை விடவும் அதிகம்

by Jey

கல்கரியில் கொவிட் வைரஸ் தொற்று பரவுகை வீதம் இந்தியாவை விடவும் அதிகமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

கல்கரி வலயத்தில் தற்பொழுது 8800 கொவிட் தொற்றாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளதாகவும் தடுப்பூசிகள் மூலம் கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவில் நோய்த் தொற்றாளர்கள் பதிவாகும் எண்ணிக்கையை விடவும் கல்கரியில் இரண்டு மடங்கு நோய்த் தொற்றாளர்கள் பதிவாகி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது கல்கரியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தடுப்பூசி விநியோக முறைமை போதுமானதல்ல என கல்கரி மேயர் நாஹீட் நென்ஷீ தெரிவித்துள்ளார்.

related posts