கனடாவில் சிரேஸ்ட பிரஜைகளை விடவும் தற்பொழுது இளைய தலைமுறையினரை அதிகளவில் கொவிட்-19 நோய்த் தொற்று தாக்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சிரேஸ்ட பிரஜைகளுக்கு அதிகளவில் கொவிட் தடுப்பூசி ஏற்றபப்ட்டு வருகின்ற நிலையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கனேடிய சுகாதாரத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு மூலம் கொவிடிற்கு இளையோர் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
60 வயதுக்கும் குறைந்தவர்கள் அதிகளவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
கடந்த பெப்ரவரி மாதத்தின் பின்னர் 40 வயதிற்கும் குறைந்தவர்களே அதிகளவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக ஆய்வில் மேலும் தெரிவி;க்கப்பட்டுள்ளது.
ஆபத்தான வலயங்களில் தற்பொழுது 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.