அஸ்ட்ராசென்கா தடுப்பூசி ஆபத்தானது கிடையாது என மருத்துவ நிபுணர்கள் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கியூபெக்கில் இந்த தடுப்பூசியை ஏற்றிக் கொண்ட மூன்றாவது நபருக்கு இரத்த உறைவு நோய் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான ஓர் பின்னணியிலும் குறித்த தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதில் ஆபத்து கிடையாது என மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வாறு இரத்த உறைவினால் இறுதியாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உயிர் ஆபத்து எதுவும் கிடையாது என சுகாதாரத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
ஒரு லட்சம் பேரில் ஒருவர் இவ்வாறு இரத்த உறைவு நோயினால் பாதிக்கப்படுவதாகவும் இது ஆபத்தான நிலைமை கிடையாது எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.