அல்பர்ட்டா மாகாணத்தில் கொவிட் பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக சட்ட மன்ற அமர்வுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மாகாணத்தில் சட்ட மன்ற அமர்வுகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கொவிட் நோய்த் தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு அமர்வுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவைத் தலைவர் ஜேசன் நிக்சன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முதல்வர் ஜேசன் கெனி தனது கடமைகளை உரிய முறையில் ஆற்றத் தவறியுள்ளதாகவும் நெருக்கடியான நிலையில் கென்னி உரிய தலைமைத்துவத்தை வழங்கவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் ராசெல் நோட்லீ தெரிவித்துள்ளார்.