ஒன்றாரியோவின் ஆபத்தான பகுதிகளில் வயது வந்த சகலருக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளது.
இன்றைய தினம் முதல் தடுப்பூசிக்காக முன்பதிவு செய்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது.
கொவிட் அதி ஆபத்து வலயங்களைச் சேர்ந்த அனைவரும் தடுப்பூசிக்காக தங்களை முன்பதிவு செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண ஒன்லைன் பதிவு முறையில் அல்லது நேரடியாக பொதுச் சுகாதார அலகுகளின் ஊடாக தங்களை பதிவு செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் அதிகளவில் தடுப்பூசிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியோட் தெரிவித்துள்ளார்.