பறக்கும் தட்டுக்கள் குறித்து அல்பர்ட்டா பொலிஸ் அவசர அழைப்பு பிரிவின் இலக்கமான 911க்கு அதிகளவு அழைப்புக்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்து.
கொவிட்-19 நோய்த் தொற்று அச்சுறுத்தல் காரணமாக முடங்கியிருக்கும் மக்கள் அதிகளவில் வாகனத்தை அவதானிக்கின்றனர்.
வானில் தென்படும் பல்வேறு விடயங்களை அவதானித்து மக்கள் இவ்வாறு அழைப்பு எடுப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பறக்கும் தட்டு மற்றும் வேற்றுகிரகவாசிகள் தொடர்பில் இந்த பெருந்தொற்று காலத்தில் மக்கள் அதிகளவில் ஆர்வத்துடன் தேடுவதாக குறிப்பிடுகின்றனர்.
இந்த நிலையில் பறக்கும் தட்டுக்களை தாம் அவதானித்ததாகவும் அது குறித்து கவனம் செலுத்துமாறும் பல்வேறு தொலைபேசி அழைப்புக்கள் அல்பர்ட்டா பொலிஸ் அவசர அழைப்பு எண்ணிற்கு கிடைக்கப் பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.