புதிதாக பிறக்கும் சிசுக்களை விற்பனை செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவர் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டள்ளனர்.
இந்த இருவரும் பல்கேரிய பிரஜைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
58 வயதான கணவரும், 51 வயதான மனைவியும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பல்கேரியாவில் பிறந்த சிசுக்களை இந்த இருவரும் விற்பனை செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பல்கேரியாவில் கர்ப்பிணிப் பெண்களை கிரேக்கம் உள்ளிட்ட நாடுகளுக்கு அழைத்துச் சென்று சிசுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.