மைக்ரோசாப்டின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ், தங்களது 27 ஆண்டுகால உறவு முடிந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இருவரும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளனர்.
ஒரு அறிக்கையை வெளியிட்ட பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் தங்கள் திருமணத்தை முடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இனி நாங்கள் ஒன்றாக முன்னேற முடியாது என்ற நிலைக்கு தற்போது வந்துவிட்டோம் என்று நாங்கள் உணர்கிறோம் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பில் கேட்ஸ் (Bill Gates) ட்வீட் செய்துள்ளார். அதில் அவர், “நாங்கள் எங்கள் உறவு குறித்து ஆழமாக யோசித்தோம். முடிவில் நாங்கள் இந்த உறவை முடித்துக்கொள்வதாக முடிவெடுத்துள்ளோம். இனி எங்களால் ஒன்றாக முன்னேற முடியாது. இருவரும் எங்களுக்கான தனிமையை விரும்புகிறோம். மேலும் வாழ்க்கையின் ஒரு புதிய கட்டத்தை நோக்கி செல்ல விரும்புகிறோம்” என்று எழுதியுள்ளார்.
விவாகரத்துக்குப் பிறகு, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸின் நிதி விவகாரங்கள் எப்படி இருக்கும் என்பது குறித்து அதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை. இருவரும் நன்கொடை மற்றும் சமூக சேவை பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ‘பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை’-யின் அறங்காவலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது 2000 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.