Home கனடா கொவிட் சட்டங்களை மீறிய 220 பேருக்கு எதிராக குற்றச்சாட்டு

கொவிட் சட்டங்களை மீறிய 220 பேருக்கு எதிராக குற்றச்சாட்டு

by Jey

றொரன்டோவில் கொவிட் சட்டங்களை மீறிச் செயற்பட்ட 220 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர சட்டங்களை மீறிச் செயற்பட்டவர்களுக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த வார இறுதி நாட்களில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது இந்த குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்;கப்படுகின்றது.

றொரன்டோ பொலிஸின் இடைக்கால பதில் பிரதானி ஜேம்ஸ் ராமர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

கொவிட் பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு பொலிஸார் கண்காணிப்பு பணிகளை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

related posts