சீனாவினால் தயாரிக்கப்பட்டுள்ள இரு கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்துவதற்கு விரைவில் அனுமதியளிக்கப்படும்’ என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்கத் துவங்கியுள்ளது. இதையடுத்து பல்வேறு நாடுகளும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றன.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம், சினோவாக் ஆகிய கொரோனா தடுப்பு மருந்துகளை அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்துவது குறித்து இந்த வாரம் அறிவிக்கப்படும்.
சில நாடுகள் இந்த தடுப்பூசிகளைச் செலுத்துவதற்கு எங்கள் முடிவுக்காகக் காத்திருக்கின்றன என்பதை நன்கு அறிவோம். விரைவில் அறிவிக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பைஸர், மாடர்னா, ஸ்புட்னிக், கோவாக்சின், அஸ்ட்ராஜெனிகா ஆகிய தடுப்பூசிகளுக்கு மட்டுமே உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.