Home கனடா தடுப்பூசியின் முதல் மருந்தளவை போட்டவர்களுக்கான அறிவுறுத்தல்

தடுப்பூசியின் முதல் மருந்தளவை போட்டவர்களுக்கான அறிவுறுத்தல்

by Jey

கொவிட் தடுப்பூசியின் முதல் மருந்தளவை மட்டும் போட்டவர்களுக்கு றொரன்டோவின் பிரதம மருத்துவ அதிகாரி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

முதல் மருந்தளவு போட்டுக் கொண்டதனால் ஆபத்து இல்லை என எவரும் கருதக் கூடாது என பிரதம சுகாதார அதிகாரி டொக்டர் எய்லீன் வில்லா தெரிவித்துள்ளார்.

ஒரு மருந்தளவை மட்டும் போட்டுக் கொண்டவர்கள் பாதுகாப்பு நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

தடுப்பூசி ஏற்றிக் கொண்டாலும் தொடர்ந்தும் அவர்களுக்கு நோய்த் தொற்று பரவக்கூடிய அபாயம் நீடிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையில் றொரன்டோவில் 1.2 மில்லியன் மருந்தளவு தடுப்பூசிகள் மக்களுக்கு ஏற்றப்பட்டுள்ளது.

related posts