மிழகத்தில் கரோனா அதிகரிப்பதை அடுத்து மே 6 முதல் மே 20ஆம் தேதி காலை 4 மணி வரை தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.
மே 6ஆம் தேதி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே காய்கறி, மளிகைக்கடை, தேனீர் கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவசர மருத்துவத் தேவைகளுக்கும், விமான நிலையம் / ரயில் நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும்.
ரயில், மெட்ரோ, தனியார் பேருந்துகளில் 50% பொதுமக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
கிடங்குகளில், சரக்குகளை ஏற்றுவது, இறக்குவது மற்றும் சரக்குகளைச் சேமித்து வைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.
ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து பணியாற்றலாம்.
பெட்ரோல், டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது
இதுதவிர இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்டவை தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.