யுக்கான் மாகாணத்தில் அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளது.
என்.டி.பி கட்சியுடன் ஏற்படுத்திக் கொண்டு இணக்கப்பாட்டின் அடிப்படையில் லிபரல் கட்சி யுக்கானில் ஆட்சியை நிறுவியுள்ளது.
லிபரல் கட்சியும் யுக்கான் கட்சியும் தேர்தலில் சம அளவில் ஆசனங்களைப் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் என்.டி.பி கட்சியின் ஆதரவுடன் லிபரல் கட்சி ஆட்சியை நிறுவியுள்ளது.
யுக்கானின் முதல்வராக சாண்டி சில்வர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.