பீல் பிராந்தியத்தில் அனைத்து வயது வந்தவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை முதல் பிராந்தியத்தில் உள்ள அனைத்து வயது வந்தவர்களும் தடுப்பூசிக்காக முன்பதிவு செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
பிராந்தியத்தின் அண்டைய பகுதிகளில் கொவிட் நோய்த் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வடைந்து செல்லும் காரணத்தினால் பீல் பிராந்தியத்தின் பெருமளவான பகுதிகளில் ஏற்கனவே அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிராந்தியத்தின் அனைவரும் தடுப்பூசிக்காக முன்பதிவு செய்ய முடியும் என்ற அறிவிப்பின் மூலம் மேலும் சுமார் 50000 பேர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.