கனடாவில் 12 வயதுக்கும் மேற்பட்டவர்கள் பைசர் தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசியை 12 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் பயன்படுத்த முடியும் என கனேடிய சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னதாக 16 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசி பொருத்தமானது என பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
எனினும், விரிவான விஞ்ஞானபூர்வமான ஆய்வுகளின் பின்னர் 12 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது கனேடிய சுகாதாரத் திணைக்களத்தின் பிரதம மருத்துவ ஆலோசகர் டொக்டர் சுப்ரியா சர்மா தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி பயன்பாடு நோயை கட்டுப்படுத்துவதற்கு பெரிதும் உதவும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.