Pfizer தடுப்பூசி கொரோனா தொற்றுக்கு எதிராக 95 வீத பாதுகாப்பை வழங்குவதாக சர்வதேச ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனினும், கொரோனா தொற்றுக்கு எதிராக 95 வீதமான பாதுகாப்பை பெற்றுக் கொள்வதற்கு இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்வது அவசியம் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஒரு தடுப்பூசியை மாத்திரம் பெற்றுக் கொண்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி மூலமான பாதுகாப்பு குறைவடைவதாக, சர்வதேச ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், புதிய மாறுபாடு கொண்ட கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் பட்சத்தில், ஒரு தடுப்பூசியை மற்றும் பெற்றுக் கொண்டவர்களுக்கு இந்த பாதுகாப்பு மிகக் குறைந்த மட்டத்திலேயே காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சர்வதேச கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளின் மூலம் கொரோனா தொற்று பரவல் படிப்படியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என, இஸ்ரேலிய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.