ஜப்பானில் அவசரகால நிலைமை நீடிக்;கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் நோய்த் தொற்று காரணமாக ஜப்பானில் ஏற்கனவே அவசரகால நிலைமை பிரகடனம் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அவசரகாலநிலைமையை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடாத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொவிட் அச்சுறுத்தலினால் திட்டமிட்டவாறு போட்டிகளை நடாத்த முடியுமா என்ற சந்தேகம் உருவாகியுள்ளது.