Home கனடா அல்பர்ட்டாவில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 பேர் வைத்தியசாலையில்

அல்பர்ட்டாவில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 பேர் வைத்தியசாலையில்

by Jey

அல்பர்ட்டாவில் ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவமொன்றில் மூன்று பேர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அல்பர்ட்டாவின் புனித அல்பர்ட் பகுதியின் சய்டாடல் மிவ்ஸ் மேற்கு சிரேஸ்ட பிரஜைகளுக்கான கட்டடத்தில் இந்த பாரிய தீவிபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த தீ விபத்துச் சம்பவத்தில் இரண்டு பேர் மோசமாக பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இவர்கள் ஆபத்தை கடந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மற்றுமொரு நபர் சிறுகாயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிடப்படுகின்றது.

தீயனைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு உடன் விரைந்து தீயைக்கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

related posts