ஆப்கானிஸ்தானுக்கு யுத்த விமானங்களை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள அமெரிக்க மற்றும் கூட்டுப் படையினருக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் இந்த யுத்த விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக நேட்டோ கூட்டுப்படையினரும், அமெரிக்க படையினரும் நிலைகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அண்மையில் அமெரிக்கப் படையினர் பெருமளவில் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள சர்வதேச படையினர் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் காரணமாக அமெரிக்கா மேலதிக யுத்த விமானங்களை அனுப்பி வைத்துள்ளது.