Home இந்தியா புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார் என்.ரங்கசாமி

புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார் என்.ரங்கசாமி

by admin

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 15வது சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிந்து, என்ஆர் காங்கிரஸ், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கிறது.

மொத்தமுள்ள 30 இடங்களில் இக்கூட்டணி 16 (என் ஆர் காங்கிரஸ் 10, பாஜக 6) இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கிறது.
என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் என். ரங்கசாமி சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டு முதல்வராக பொறுப்பேற்றார்.

இதற்கான ஆதரவு கடிதத்தை அவர் துணை நிலை ஆளுநர் தமிழிசையிடம் வழங்கி உரிமை கோரியிருந்தார்.

இதனையடுத்து புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெற்றது. முன்னதாக புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் பகல் 12. 30 மணிக்கு தொடங்கிய பதவியேற்பு விழாவில், அனுமதிக்கப்பட்ட50 பேர் நபர்கள் மட்டும் பங்கேற்றனர்.

பிற்பகல் 1.20 மணிக்கு என் ரங்கசாமி முதல்வராக பதவியேற்றார். துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ரங்கசாமி கடவுளின் பெயரால் உறுதிமொழியை ஏற்று முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

புதுச்சேரி தலைமைச் செயலர் அஸ்வனி குமார், என்ஆர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் என் எஸ் ஜே ஜெயபால், கோகுலகிருஷ்ணன் எம்பி, பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, பாஜக பொறுப்பாளர்கள் நிர்மல் குமார் சுரானா, சி.டி. ரவி, முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், பாஜக மாநிலத் தலைவர் வி. சாமிநாதன், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், திமுக மாநில அமைப்பாளர் ஆர்.சிவா, காங்கிரஸ் எம்எல்ஏ வைத்தியநாதன், பாமக அமைப்பாளர் கோ.தன் ராஜ் மற்றும் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி மாநிலத்தின் 20ஆவது முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்றார்.
இவர் நான்காவது முறையாக முதல்வராக பதவியேற்றார். இரண்டு முறை காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் முதல்வராகவும், அதன்பிறகு 2011ல் என்.ஆர். காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கி ஒரு முறை முதல்வராக இருந்துள்ளார்.

related posts