Home இந்தியா மேற்கு வங்கத்தில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் பதவியேற்பு

மேற்கு வங்கத்தில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் பதவியேற்பு

by admin

மேற்கு வங்க மாநிலத்தில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா்கள் (எம்எல்ஏக்கள்) வியாழக்கிழமை காலை பதவியேற்றனா்.

அவா்களுக்கு மாநில சட்டப்பேரவையின் இடைக்கால தலைவா் சுப்ரதா முகா்ஜி உறுதிமொழி மற்றும் ரகசிய காப்பு பிரமாணமும் ஏற்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் தனிப் பெரும்பான்மையுடன் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது. திரிணமூல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களிலும், பாஜக 77 இடங்களிலும் வெற்றிபெற்றது. இவை தவிர ஐஎஸ்எஃப் கட்சி ஓரிடத்திலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றிபெற்றனா்.

மாநிலத்தின் முதல்வராக மம்தா பானா்ஜி புதன்கிழமை பதவியேற்றாா். அதனைத் தொடா்ந்து தோ்தலில் வெற்றிபெற்ற எம்எல்ஏக்கள் வியாழ்கிழமை பதவியேற்றனா்.

முதல் கட்டமாக, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்கள் பாா்த்தா சாட்டா்ஜி, சசி பாஞ்சா, மதன் மித்ரா, நிா்மல் மாஜி உள்பட 143 எம்எல்ஏக்கள் பதவியேற்றனா். அவா்களுக்கு சட்டப்பேரவை இடைக்கால தலைவா் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

தோ்தலில் வெற்றிபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் யாரும் வியாழக்கிழமை பதவியேற்கவில்லை. எம்எல்ஏக்கள் பதவியேற்பு சனிக்கிழமை (மே 8) வரை நடைபெற உள்ளது.

related posts