றொரன்டோவில் பாடசாலைகள், பாலர்பாடசாலைகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்கள் தொடர்பிலும் விசேட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு நேரடியாக கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
கொவிட்-19 நோய்த் தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் ஓர் நடவடிக்கையாக இவ்வாறு நேரடி கற்பித்தல் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 10ம் திகதி முதல் இந்த உத்தரவு அமுல்படுத்தப்படும் எனவும் மறு அறிவித்தல் வரையில் இந்த உத்தரவு அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தனியார் பாடசாலைகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களிலும் இந்த தடையுத்தரவு அமுல்படுத்தப்பட உள்ளது.
இணைய வழியில் கற்றல் நடவடிக்கைகளை தொடர்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.