கனடாவில் சீன யுவதி ஒருவரை துன்புறுத்திய நபருக்கு வீட்டுக் காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
றொரன்டோவின் பொதுப் போக்குவரத்து சேவை பேருந்தில் இந்த சம்பவம் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெற்றுள்ளது.
சீனாவைச் சேர்ந்த இளம் மாணவி ஒருவரை, நபர் ஒருவர் இனக் குரோத அடிப்படையில் தூற்றி இழிவுபடுத்தி தாக்கியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மைக்கல் ஹென்னிஸ்ஸி என்ற 47 வயதான நபர் ஒருவர் இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபருக்கு றொரன்டோ நீதிமன்றம் நான்கு மாத கால வீட்டுக் காவல் தண்டனை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இனவாத அடிப்படையில் முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகள் கண்டிக்கப்பட வேண்டியது என நீதவான் ஹோவார்ட் போர்ன்ஸ்டென் தெரிவித்துள்ளார்.