மானிடோபாவில் சுகாதார கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என மாகாண பிரதம பொதுச் சுகாதார அதிகாரி டொக்டர் பெர்ன்ட் ரவ்சீன் தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் முதல் இந்த சுகாதார கட்டுப்பாடுகள் அறிமுகம் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே இந்த கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டுள்ளதாகவும் மீளவும் மக்கள் சுகாதாரக் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
நோய்த் தொற்றாளர் எண்ணிக்கையை குறைப்பதற்கு இந்த சுகாதார வழிகாட்டல்கள் கெடுபிடிகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.