அமெரிக்காவின் இடாஹோ மாகாண பள்ளியில், 6ம் வகுப்பு கற்கும் மாணவியொருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் காயம் அடைந்தனர்.
அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தின் ரிக்பியில் உள்ள நடுநிலைப் பள்ளியில், 1,500க்கும் மேற்பட்ட மாணவ — மாணவியர் படித்து வருகின்றனர்.இந்த பள்ளியின், 6ம் வகுப்பு மாணவி ஒருவர், பள்ளிக்கு வந்தார். திடீரென தன் புத்தகப்பையில் இருந்து, ஒரு கைத்துப்பாக்கியை எடுத்த மாணவி, கண்மூடித்தனமாக சுட்டார்.இதில், இரு மாணவர்கள் மற்றும் பள்ளி காவலரின் கால்களில் காயம் ஏற்பட்டது.
இதனால் ஆசிரியர்கள், மாணவ – மாணவியர் உட்பட, அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அருகில் இருந்த ஆசிரியை ஒருவர், மாணவியிடம் இருந்து துப்பாக்கியை பறித்து கொண்டார். காயம் அடைந்த மூவரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசாரிடம், மாணவி ஒப்படைக்கப்பட்டார். அவரிடம், போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.