கனடாவில் கடந்த மாதம் சுமார் இரண்டு லட்சம் தொழில்கள் இழக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தின் முடக்க நிலைமைகளினால் பல்வேறு வர்த்தக முயற்சிகள் மூடப்பட வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது.
கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளளது.
கடந்த மாதம் கனடாவில் 129000 பேர் முழு நேர பணிகளை இழந்துள்ளதுடன், 78000 பேர் பகுதி நேர தொழில்களை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு மாத கால இடைவெளியில் வேலையற்றோர் வீதம் 7.5 வீதத்திலிருந்து 8.1 வீதமாக உயர்வடைந்துள்ளது.
கொவிட் பெருந்தொற்று நிலைமைகளினால் பொருளாதாரம் பாரியளவில் இழப்புக்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.