Home விளையாட்டு மலேசிய ஓபன் பாட்மிண்டன் போட்டி ஒத்திவைப்பு

மலேசிய ஓபன் பாட்மிண்டன் போட்டி ஒத்திவைப்பு

by admin

கோலா லம்பூரில் நடைபெற இருந்த மலேசிய ஓபன் சூப்பர் 750 போட்டி, கரோனா பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்ததை அடுத்து, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மலேசிய ஓபன் போட்டி மே 25 முதல் 30 வரை நடைபெற இருந்தது. இந்தப் போட்டி ஒலிம்பிக்ஸ் போட்டிக்கான தகுதிப் போட்டியாகவும் இருந்தது.

தில்லியில் நடைபெற இருந்த இந்தியா ஓபன் பாட்மிண்டன் போட்டி கடந்த மாதம் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் இந்திய வீரர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என அறியப்படுகிறது.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதிபெறுவதற்காக எஞ்சியிருந்த 3 போட்டிகளில் தற்போது 2 போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக, ஜூன் 1 முதல் 6 வரை சிங்கப்பூர் ஓபன் போட்டி நடைபெறவுள்ளது. ஆனால் இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு சிங்கப்பூர் தடை விதித்துள்ளது. இந்தச் சூழல், ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான முயற்சியில் உள்ள சாய்னா நெவால், ஸ்ரீகாந்த் ஆகிய இந்தியர்களுக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது.

பி.வி. சிந்து, சாய் பிரணீத், ஆடவர் இரட்டையர்கள் சிராக் ஷெட்டி – சாத்விக்சாய்ராஜ் ஆகிய இந்திய பாட்மிண்டன் வீரர்கள் ஏற்கெனவே ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்கள்.

 

related posts