Home கனடா தடுப்பூசிகள் பூரண பாதுகாப்பினை தராது

தடுப்பூசிகள் பூரண பாதுகாப்பினை தராது

by Jey

கொவிட்-19 தடுப்பூசிகள் பூரண பாதுகாப்பினை தராது என கனடாவின் பிரதம பொதுச் சுகாதார அதிகாரி திரேசா டேம் தெரிவித்துள்ளார்.

கொவிட் பெருந்தொற்றை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் நோய்த் தொற்றிலிருந்து பூரணமான பாதுகாப்பினை வழங்காது என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இரண்டு மருந்தளவு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்கள் கூட நோய்த் தொற்றினால் பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிடலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறெனினும் நோய்த் தொற்று காவுகை பாரியளவில் கட்டுப்படுத்தப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நோய்த் தொற்று சமூகத்தில் பரவாதிருக்கவும், தங்களை பாதுகாத்துக்கொள்ளவும் தடுப்பூசி ஏற்றிக்கொள்வது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

related posts