Home இந்தியா எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

by admin

தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்படாத நிலையில், இன்று காலை மீண்டும் கூட்டம் நடைபெற்றது.

எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வதில், எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. சுமார் மூன்று மணி நேரம் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இறுதியாக, அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டது. பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது.

எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி கே. பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது குறித்த அதிகாரப்பூர்வ கடிதத்தை அதிமுக சார்பில், தங்கமணியும், வேலுமணியும், தலைமைச் செயலகம் சென்று பேரவை செயலரிடம் அளித்தனர்.

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில், கூட்டத்திலிருந்து ஓ. பன்னீர்செல்வம் வெளியேறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

related posts