ஒன்றாரியோ மாகாணத்தில் கொவிட் நோய்த் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை முதல் தடவையாக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
சுமார் ஆறு வாரங்களின் பின்னர் இவ்வாறு நோய்த் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் கொவிட் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2716 ஆக பதிவாகியுள்ளதுடன் 19 மரணங்களும் பதிவாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றாரியோவில் 2557 கொவிட் தொற்றாளிகள் பதிவாகியிருந்தனர்.
இந்த வாரத்தில் தொற்றாளர்களின் நாளாந்த சராசரி எண்ணிக்கை 3017 ஆக காணப்படுகின்றது.
கடந்த வாரம் இந்த எண்ணிக்கை 3917 ஆக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.