வான்கூவர் விமான நிலைய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
28 வயதான நபர் ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் இடம்பெற்று வரும் கோஷ்டி மோதல்கள் காரணமாகவே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
வாகனமொன்றில் வந்த நபர்களினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் காரணமாக விமான நிலையத்தின் பணிகள் சில நேரம் பாதிக்கப்பட்டதாகவும் பின்னர் பணிகள் வழமைக்குத் திரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணகைளை ஆரம்பித்துள்ளனர்.